என சோசியர் சொன்னார்.
படித்த படிப்பிற்க்கான பொருத்தமான வேலை
என பலரும் பாராட்டினர்.
கொழுத்த பணம் பண்ணலாம் -
உறவினர்கள் ஒரு பக்கம்..!
காசுதான் காலத்தின் கட்டாயம் -என
என் மனமும் மறு பக்கம்... !
கேட்டதை விட அதிக பணம்
நினைத்ததை விட அதிக சுகம்
கொஞ்ச நாள் மனத்தின் கூத்தாட்டம் ...
நின்று போனது ஒரு நாள் எல்லாம்...
அன்பான மனைவி... அவளது வளைகாப்பு ...
ஷ்கைப்பின் உதவியால்.
கண்ணீர் விடத்தெரியாத கணினி
அவள் விசும்பல்களை மட்டும்
என் காதில் சொன்னது.
பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும்
ஆயிரமாயிர மைல்களுக்கு அப்பால்
தனிமை மட்டும் நிசமென தெரிந்த பின்
சோசியர் சொன்னது யோகமா, சாபமா
என மனதில் ஒரு பட்டிமன்றம்...
உண்மை செயித்த போது
என் ஊரின் அழுக்குத் தண்ணீரும்,
மின்சாரம் இல்லாத இரவுகளும்
சொர்க்கமென தோன்றின..
வேண்டியது எல்லாம் கிடைத்த பின்
வேண்டாம் என சொல்கிற மனம்
அறிவின் குரல் ஒலிக்கும் போது
மனதின் இரைச்சல் அதை மறைத்து விட்டது
மீண்டும் நாடு செல்லும் போது - எதிலிருந்தோ
மீண்டு செல்வது போல் தோணியது
இழந்ததை சரி செய்யும் முயற்சியில் புரிந்தது
நான் மீண்டும் பிறந்துவிட்டேன் ...
~கலாப்ரியன்
No comments:
Post a Comment