கை எடுத்துக் கும்பிடுவார்
கருத்தொன்று கொண்டிடுவார்
பொய் பேசும் உதட்டாலே
புகழ் மாலை சூட்டிடுவார்
உன் உயிரே என் உடலில்
இயங்குதென ஏய்த்திடுவார்
உன் பின்னால் போனதுமே
உதட்டோரம் சிரித்துடுவார்
சொல்லாத சொந்தமெல்லாம்
பேர் கொண்டுச் சொல்லிடுவார்
சொர்க்கமது என்னவென்றால்
உன் சொந்தமோன்றே போதும் என்பார்
விதி வந்து நாம் போகையிலே
என் உயிரே போகுதென்பார் ...
நீருக்குள் மூழ்கிவிட்டு - நம்
நினைவையும் சேர்த்தெரித்துடுவார்
நல்லவரின் முகவரியை
நான் உனக்குச் சொல்லிடுவேன் - கேள்
நன்மை எல்லாம் ஓர் உருவில் - நம்
அன்னையெனக் காண்கின்றேன் ...
கருவான நாள் தொட்டு
உருவான நாள் வரைக்கும்
கலங்காமல் காத்திட்டாள்
அவளே நம் முதல் தெய்வம்
~கலாப்ரியன்
No comments:
Post a Comment