ஈன்றெடுத்த
நொடி முதலில்
தன் மகவின் அழுகை
அன்னையின் சொர்க்கம் ...
அந்நொடி போய்
அடுத்த நொடி - முதல்
அழுகையின்றி சிரித்திருக்க
அதுவே அவள்
சொர்க்கம் என்றாள்
ஆற்றில் வரும்
வெள்ளம் கண்டால்
உளவு செய்த உள்ளத்திற்கு
அதுவே சொர்க்கம்
நட்டு வைத்த
நாற்று எல்லாம்
நங்கை போல்
நாணம் கொண்டால் - அந்த
வெள்ளம் கொஞ்சம்
தஞ்சம் கொண்ட
அணையே சொர்க்கம்..
கூட்டமாக இன்பமெல்லாம்
கூடி நின்ற போதிலும்
வாட்டம் கண்டு வயிறு - அது
வாழைப்பழம் கூட
சொர்க்கம் எனும்...
கல்வி கற்கும்
கடமையெல்லாம்
காலையிலே முடிந்து விட்டால்
தொடர்ந்து வரும்
மாலையில்
தொல்லையின்றி விளையாட
அதுவே சொர்க்கம்
காதல் செய்த
பெண்ணவளை
கைப்பிடித்தல் சொர்க்கம் - என
காதல் செய்து
கண்டு கொண்ட
காளையவன் சொல்லட்டும்...
கைப்பிடித்தப்
பெண்ணவளை
காதலித்துப் பாருங்கள் - உயிர்க்
காற்று உள்ள
காலம் மட்டும்
காதல் உம்மைக்
காதல் செய்யும் ...
காதல் உள்ள
காலம் மட்டும்
வாழ்க்கை
அது
சொர்க்கமாகும் ...!
கலாப்ரியன்..
No comments:
Post a Comment