என் சிறுவயது காலகட்டத்தில் நான் என் வாழ்வின் "ஒரே" லட்சியம் என்று கொண்டிருந்த "பல" விசயங்கள் இப்போது நினைத்துப் பார்க்கையில் சிரிக்கத்தோன்றும் விசயங்களாக இருக்கிறது.
Costly Bikes, MNC Job, Car, etc, etc., என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இப்போது என்னால் எளிதில் அடையாக் கூடியதாக இருப்பதால் ஒரு நகைப்பு. இது காலத்துடன் பொருந்தாமல் வாழும் மனப்போக்கின் அடையாளம்.
இப்போது என்னிடம் இருக்கும் பணம் பொருள் என பல விசயங்களைக் கொண்டு என் கடந்த காலத்தில் நான் வேண்டியதை மதிப்பீடு செய்வது சரியா? சிறு வயதில் இந்த வசதிகள் ஏதும் என்னிடம் இல்லாத காரணத்தால் தானே இவை யாவும் எனக்கு லட்சியங்களாகத் தெரிந்தது..? இது நிகழ் காலத்தில் இருந்து பின்னோக்கிய பார்வை..
இப்போது.. முன்னோக்கிய பார்வையை சிறிது சிந்திக்கலாம்...
இன்றிலிருந்து ஒரு 10 அல்லது 15 ஆண்டுகளுக்குப் பின் உங்களுக்கு என்ன வேண்டும் என சிந்தியுங்கள்... இலக்கு நிர்ணயம் செய்யலாம்.. Set A Goal...
நமது பின்னோக்கிய பார்வையில் கிடைத்த பாடத்தை மறந்து விடாதீர்கள். இன்றிலிருந்து 15 ஆண்டுகளுக்குள் நீங்கள் அடைய வேண்டிய இலக்காக நீங்கள் நினைப்பது, 15 ஆண்டுகளுக்குப் பிறகு நகைப்பிற்குரியதாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்...
இதுதான் நமது முன்னோர் சொன்ன அறிவுரை - கேட்பின் பெரிது கேள்.
நீங்கள் உங்களின் இன்றைய பலத்தைக் கொண்டு 15 ஆண்டுகளுக்குப் பிறகு வேண்டியதை நிர்ணயம் செய்யாதீர்கள். ஏதோ ஒரு மிகப் பெரிய விசயமோ அல்லது செயலோ, உங்களிடம் தற்போது இல்லாத அல்லது உங்களால் இயலாத ஒன்றாக இருக்கட்டும். அதை நோக்கிய உங்களின் பயணத்தில் உங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.
இமயத்தை நோக்கிய பயணம் மலையேறும் கலையை உங்களுக்கு எளிதாக்கி விடக்கூடும்.
இரு விளையாட்டு வீரர்கள், எதிர்வரும் போட்டிக்காகத் தயாராகி கொண்டிருந்தனர். 6 அடி 2 அங்குலம் உயரம் தாண்டுவது போட்டியின் இலக்கு. முதலாமானவன் இலக்கினைச் சரியாக கொண்டு கடும் பயிற்சியை மேற்கொண்டான். இரண்டாமவன் 6 அடி 5 அங்குலம் தன் இலக்காகக் கொண்டான்.
போட்டி நாள் - இருவரும் 6 அடி 2 அங்குலத்தை வெகு எளிதாகத் தாண்டினர். போட்டியின் விதி முறைப் படி, இலக்கு சிறுது அதிகரிக்கப்பட்டது... இப்போது 6 அடி 4 அங்குலம். வெற்றி யாருக்கு என உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இலக்கு நிர்யணம் செய்வதில் நாம் இரண்டமானவன் போல இரண்டடி உயர்வான விசயங்களைக் கொள்வோம்.
வள்ளுவனை மீண்டும் நினைவு படுத்துகிறேன் ...
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற...
உங்களை விட வேறு எவரும் உங்களைப் பெரிதாகக் கொண்டாட முடியாது. திட்பமான மனதுடன் கேட்பது பெரிதாகவே இருக்கட்டும்.. விடா முயற்சியும், கடும் பயிற்சியும் வெற்றியைத் தேடித் தரும் - அது கண்டிப்பாக சிறியதாக இருக்காது...
வாழ்க வளமுடன்.
~கலாப்ரியன்
Hi nila kutti ...
ReplyDelete