Thursday, August 20, 2026

அம்மாவின் சேலை

 


அம்மாவுடன் 
இருக்கும் போது 
வெறும் 
சேலைகளாகத் தெரிபவை  ..
அவளை விட்டு 
தூரமாக இருக்கும் போது 
அம்மாவாகவே 
மாறிவிடுகின்றது.

மென்மை

 


அம்மாவுக்காக 
நெய்யப்படும் சேலைகள் 
எல்லாம் ஏனோ  
மென்மையாகவே 
இருந்து விடுகின்றது.

கலாப்ரியன் 

தேநீர் தவம்

 


மழையும் நானும்..

இடையில் இந்த ஜன்னல்..!

எண்ணங்கள் 

அற்றுப்போன 

அந்தத் தேநீர் 

ஒரு தவம் !! 


கலாப்ரியன்

ஆனந்தக் கண்ணீர்

 



மழை வந்ததும்  
மகிழ்ந்தன  
மரங்கள்..! 
இலைகளில் எல்லாம் 
ஆனந்தக் கண்ணீர் !

கலாப்ரியன்

காரணம் இல்லா மழை

 



மழைக்கு
காரணம் ஒன்றும்
தேவைப்படவில்லை..
அது
தானாகவேப்
பெய்து விடுகின்றது..

கலாப்ரியன்


மீண்டும் மழை

 



பரந்து கிடந்து
வெயிலின் சூட்டில்
சுருங்கிப் போவதில்லை
கடல்…
அது
மீண்டும் மழையாகவே
மாறிப் போகின்றது..!

கலாப்ரியன்

மழையின் தவம்

 


அந்த
மரத்தின் ஒரு
கிளையில்
ஒரு இலையின்
நுனியில்
கடலைச் சேர
தவம் 
செய்கின்றது
அந்த மழை..!

கலாப்ரியன் 


நிலைகள்

 


வார்த்தைகள் இல்லாத
மௌனமும் 
எண்ணம் இல்லாத 
அமைதியும் 
ஒன்றெனப் பேசப்படும் 
இரு 
வெவ்வேறான நிலைகள் !


கலாப்ரியன் 

ரசிப்பு

 



மனம்
வாழ்வின் 
அந்தந்த நிமிடங்களை
ரசிக்க
மறுத்து விடுகின்றது

கலாப்ரியன் 

கண்ணாடி

 



முடி வெட்டும் 
கடைகளில் மட்டும்
இந்தக் 
கண்ணாடி
முடியை அழகாகவே
காண்பிக்கிறது!

கலாப்ரியன் 

விதை

 



விருட்சம்

என்பது வேறொன்றும்
அல்ல..
அது…
வயது முதிர்ந்த
விதைதான்..!!

கலாப்ரியன் 

வேர்களின் கவனம்




செடிகளைத் தாங்கிப்
பிடிப்பதில்
மட்டுமே 
வேர்களின் கவனம்..
மற்றபடி
மலர்கள்
தானாகவே
மலர்ந்து விடுகின்றன..!

கலாப்ரியன்

Friday, July 17, 2026

மழை



மழைத்துளி ஒன்று

என் தோள்மேல் விழுந்தது.

குடை பிடித்து
ஒதுங்கினேன்.

ஓடையாய்ப் பெருக்கெடுத்து
என் கால்களை வருடியது.

மீண்டும் ஒதுங்கி நடந்தேன்.

என் தோளிலும்,
கால்களிலும்,
இன்னும் 

ஈரமாய் இருந்தது...

அந்த மழை.


கலாப்ரியன்

Sunday, May 10, 2026

அம்மா

 


அம்மாவுடன் 
இருக்கும் போது 
சாதாரணமாகத் தெரியும் 
சேலைகள் ...
அவளை விட்டு 
தூரமாக இருக்கும் போது 
அம்மாவாகவே 
மாறிவிடுகின்றது!

~கலாப்ரியன் 


Sunday, April 26, 2026

தரிசனம்

 

கோவிலின் வாசலில் 
உணவின் தரிசனத்திற்காகக
காத்திருந்தது 
அந்த ஏழைக் 
குடும்பம் 

கலாப்ரியன் 

Saturday, April 25, 2026

வறட்சி















குளம் வற்றிய பின்னும்
நிலத்தைக் கீறி 
நீர் தேடுகின்றது
வெயிலின் தீராத
தாகம்!

கலாப்ரியன் 

Sunday, March 15, 2026

சிலந்தியின் முயற்சி



உடைந்து போன

வீட்டுக் கூரை..
ஒட்ட வைக்கும்
முயற்சியில் சிலந்தி!

கலாப்ரியன் 

கேள்வி பதில்

 மனம் கேள்விகளைக் 

கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
பதில் தெரியாமல்
நான் மவுனியாகிறேன்..
அந்த மவுனம்
அனைத்துக் கேள்விகளுகளும்
பதில்
சொல்லி விடுகின்றது!!

கலாப்ரியன் 

கடலின் மவுனம்

 கரையில் மட்டும் தான்

அலையின் இரைச்சல்கள்..
ஆழத்தில் 
கடல்கூட அமைதிதான்!
மவுனம்தான்
முத்துக்களைப் 
பெற்றுத்தரும் என்று 
கடலுக்கும் தெரிந்திருக்கின்றது..!!

கலாப்ரியன்

வார்த்தைக் குறிப்புகள்

 


இதுதான் வானம் 

என்று நீங்கள் 

காட்டும் இடம் வெற்றிடம்தானே


காடுகள் என்று 

நீங்கள் கைகாட்டும் 

இடங்களில் 

வெறும் மரங்களின்

கூட்டம் தானே!!


வார்த்தைகள் எல்லாம்

குறிப்புகள் தான் எனில்

விளக்கமும் விமர்சனங்களும்

ஏன்!


மவுனம் சொல்லாத எதை

இந்த மொழிகள்

சொல்லிவிட முடியும்?


கலாப்ரியன்

Friday, March 6, 2026

சுவை




கண்மூடி வார்த்தைகளுக்காகக்
காத்திருக்கிறேன்
மவுனமாக!

என் கவிதையை விட
அந்த மவுனம்
சற்று சுவையாகவே
இருந்தது!! 

கலாப்ரியன் 

Tuesday, January 20, 2026

விடுதலை

ஒரு மரணத்தால் 

என்ன செய்துவிட முடியும்?


சிலரை அழ வைக்கும், 

சிலருக்கு அதிர்ச்சி தரும், 

பல பகைகளை மறக்கடிக்கும், 

பலருக்கும் பயத்தைத் தரும்.

துரோகங்களை மன்னித்து விடும், 

வெட்டியானுக்கு இருவேளைகள்  

உணவளிக்கும் ..

சில நாட்கள்தான்.. 

எண்ணங்கங்களில் இருந்து கூட, 

இறந்தவரை நீக்கிவிடும்.

மரணம், 

மரணித்தவனுக்கு மட்டும்..

மிகப்பெரும் விடுதலையை 

தந்து விடும்.!!


~கலாப்ரியன்