அம்மாவுடன்
இருக்கும் போது
வெறும்
சேலைகளாகத் தெரிபவை ..
அவளை விட்டு
தூரமாக இருக்கும் போது
அம்மாவாகவே
மாறிவிடுகின்றது.

அம்மாவுக்காக
நெய்யப்படும் சேலைகள்
எல்லாம் ஏனோ
மென்மையாகவே
இருந்து விடுகின்றது.
கலாப்ரியன்
மழையும் நானும்..
இடையில் இந்த ஜன்னல்..!
எண்ணங்கள்
அற்றுப்போன
அந்தத் தேநீர்
ஒரு தவம் !!
கலாப்ரியன்
மழை வந்ததும்
மகிழ்ந்தன
மரங்கள்..!
இலைகளில் எல்லாம்
ஆனந்தக் கண்ணீர் !
கலாப்ரியன்
மழைக்கு
காரணம் ஒன்றும்
தேவைப்படவில்லை..
அது
தானாகவேப்
பெய்து விடுகின்றது..
கலாப்ரியன்

பரந்து கிடந்து
வெயிலின் சூட்டில்
சுருங்கிப் போவதில்லை
கடல்…
அது
மீண்டும் மழையாகவே
மாறிப் போகின்றது..!
கலாப்ரியன்
அந்த
மரத்தின் ஒரு
கிளையில்
ஒரு இலையின்
நுனியில்
கடலைச் சேர
தவம்
செய்கின்றது
அந்த மழை..!
கலாப்ரியன்
வார்த்தைகள் இல்லாத
மௌனமும்
எண்ணம் இல்லாத
அமைதியும்
ஒன்றெனப் பேசப்படும்
இரு
வெவ்வேறான நிலைகள் !
கலாப்ரியன்
மனம்
வாழ்வின்
அந்தந்த நிமிடங்களை
ரசிக்க
மறுத்து விடுகின்றது
கலாப்ரியன்
முடி வெட்டும்
கடைகளில் மட்டும்
இந்தக்
கண்ணாடி
முடியை அழகாகவே
காண்பிக்கிறது!
கலாப்ரியன்
விருட்சம்
என்பது வேறொன்றும்
அல்ல..
அது…
வயது முதிர்ந்த
விதைதான்..!!
கலாப்ரியன்
செடிகளைத் தாங்கிப்
பிடிப்பதில்
மட்டுமே
வேர்களின் கவனம்..
மற்றபடி
மலர்கள்
தானாகவே
மலர்ந்து விடுகின்றன..!
கலாப்ரியன்