ஓஓ
என்ற கதறலுடன்
ஒரு கைபேசி
அழைப்பு
அதிகாலை வேளையில்..!
மாமா எனும்
ஒரு உறவு ஒன்று
மறைந்துவிட்டது
இதுதான்
செய்தி...
இதுதான் நடக்கும்
என முன்பே
தெரிந்திருக்கும் போல...!
மனம்
சிறிது சலனப்பட்டு
மீண்டும் மீண்டுவிட்டது ..!!
முன்பு ஒருநாள்
நண்பனின் இழப்பு
அதன் பின்
ஒரு உறவின்
இழப்பு ..
ஒவ்வொரு முறையும்
மனம்
சலனத்திற்கும் மீட்சிக்கும்
நடுவில்...
நமக்காகவும்
ஒரு அழைப்பு
என்றோ ஒருநாள்
யாரோ ஒருவர்
செய்யத்தான் போகின்றார் ..
இருப்பினும்
வாழ்க்கை மட்டும்
ஏனோ
இன்னமும் ஒரு
சின்ன வட்டத்துக்குள்ளேயே ..!
கலாப்ரியன்
No comments:
Post a Comment