Monday, June 12, 2017
Wednesday, March 22, 2017
Sunday, March 5, 2017
கங்கையின் கண்ணீர்
கங்கா தேவியை
தன்னிடம் கொண்டதால்
பாரத தேவியே
பெருமை
கொண்டாளாம்
அண்டம் காக்கும்
ஆதி சிவனும்
தன்
தலைமேல்
வைத்துத்
தாங்கிக் கொண்டானாம்..
கங்கை மட்டும்
அழுதாளாம்
என்னிடம்
வருவார் எல்லாம்
பாவிகளாகவே
இருக்கிறார்களே
என்று...
கலாப்ரியன்
Thursday, February 23, 2017
இதயச்சிறை...
மென் முறையில்
நீ
செய்யும்
வன்முறைகள்
ஈரமாய்
எத்தனை
எத்தனை
முத்தங்கள்...
செய்வது எல்லாம்
நீதான்
சிறை மட்டும்
எனக்கு...
ஆயுள்
முழுவதும்
உன் இதயத்தில்...
கலாப்ரியன் ....
Thursday, January 12, 2017
நடப்பு
என் மகளுடன்
கை பிடித்து
நான்
நடக்கிறேன்
நீங்கள்
பார்க்கலாம் ...
ஒரு
மகளையும்
ஒரு
மகனையும் ..
கை பிடித்து
நடக்கும் போது
இறைவனே
என்னைக்
கை பிடித்து
நடத்துவதாய் உணருகிறேன்..
கலாப்ரியன்
Subscribe to:
Posts (Atom)