வாய் மூடி
பேசாமல்
வார்த்தைகளை அடக்குதல்
மௌனமா??
சீறி எழும்
எண்ணத்தை
சீர் செய்து
அமைதியாக்கல்
மௌனமா??
ஏதோ ஒன்றை
ஏற்றுக் கொண்டு
மௌனமே
என் மொழியாக்க
சுற்றி எல்லாம் சுத்தமாய்
சுத்தவெளி
போலாக
என்னுள்ளும்
ஒரு
பெரு வெடிப்பு
சத்தமின்றி நடந்தது
இறையைத் தேடிய
என் பயணத்தில்
இறைத்துகளை கண்டேன்
நானே இறையாய்
இப் பிரபஞ்சத்தில்
ஓர்
துகளாய் ..
வாழ்க வளமுடன்...
எதிர்பார்பது எவ்விதத்தில் ஆனாலும் ஏமாற்றேயளிக்கும்.பாசம் உட்பட
ReplyDelete