பேரறிவு
அறிந்து கொள்ளும் ஆவலில்
தேடித்தேடி அலைகிறேன்
பூட்டிய அறைக்குள்ளே
சாவி அடைபட்டது போல
தேடலின் எல்லை தொடும் முன்
தேடும் பொருளிலே - நான்
தொலைந்தும் போகிறேன்..
இங்கு அனைத்தும் ஒன்றாய் - அந்த
ஒன்றே இங்கு அனைத்துமாய்
என்னுள் எல்லாமுமாய்
எல்லாவற்றிலும் நானாய் அறிந்தபின்
நீயென்ன நானென்ன
நீரென்ன காற்றென்ன
கடலென்ன மலையென்ன
அனைத்தும் நாமாய்
அறிந்த அறிவே இங்கு
பெரியதாய்...
கலாப்ரியன்
No comments:
Post a Comment