Monday, April 6, 2020

எது பெரியது



🌺எது பெரியது 🌺

"பெரிது, சிறிது என்பதெல்லாம் தேவைக்கும், காலத்திற்கும் ஏற்ப மாறுதலுக்குரியது. ஒருவன், தேவையான ஒன்றை அது தன்னிடம் இல்லாத நேரம் பெரியதாகக் கருதுகிறான்" - இவ்வாறாக முடிகிறது ஜென் 🧘🏻‍♂️ தத்துவக் கதைகளில் ஒன்று.

சரி, உங்களிடம் பெரிது என்ன என்றல் நீங்கள் எதைச் சொல்வீர்கள்? வெறும் சிந்தனைக்கு 🤔 மட்டுமே இந்தக் கேள்வி.  உங்களின் பதில் ✅ எதுவாக இருந்தாலும் அது அடுத்த கேள்விக்கு ⁉️தொடர்ச்சியானதாக இருக்கும். அதாவது, நீங்கள் பொருள் வாழ்வை முன்நிறுத்துபவராக இருந்தால், உங்களைப் பொறுத்தவரையில் ஒரு  பென்ஸ் கார் 🚘, கடற்கரை பங்களா🏘️, வங்கியில் கணிசமான தொகை💰, சுகபோக வாழ்க்கை என விரிந்து செல்லும் பட்டியல்.

அதுவே நீங்கள், அருள் வாழ்வின் தேடலில் வாழ்பவரெனில், பிரபஞ்சம், பரமாணு, இறையாற்றல், அறிவு என்றவாறு பட்டியல் மாறுபடும்.

இந்த இரண்டிலும், தவறு, சரி என்பதற்கு ஏதும் இல்லை...எல்லாம் அவரவர் பார்வை.. அவ்வளவே. ஆனால், இந்த கேள்வி அடிப்படையில் ஒரு நிர்ணயிக்கும் காரணி மட்டுமே. அது அடுத்த முக்கியமான கேள்விக்கு அடித்தளம் எனக்கூட சொல்லலாம்.

சரி, இப்போது விசயத்துக்கு வரலாம். "கேட்பின் பெரிது கேள்" என்ற முன்னோரின் வாக்கினை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள்? இது உங்கள் பொருள் வாழ்க்கை அல்லது அருள் வாழ்க்கை முறையை எவ்வாறு மாற்றுகிறது என்பதே கேள்வி. பெரிது என்ன என்பதை நீங்கள் நினைப்பதற்கும், பெரியோர்கள் நிர்ணயம் செய்ததற்கும் உள்ள இடைவெளியை அளவிடவே இந்த முயற்சி.

ஆயிரமாயிரம் ஆண்டு காலங்களுக்கு முன்னாள் நமக்குச் சொல்லிச் சென்ற ஒரு விஷயம் வெறும் பொருள் சார்ந்த விசயமாகவா இருக்கும்?

அந்தக்காலங்களில் சத்சங்கங்ககள், ஆன்மிகச்சொற்பொழிவுகள், வீதிப்பாராயணங்கள், என்று மக்களுக்குச் செவிவழியாகவே பெரும்பான்மையான நல்ல விசயங்கள்  வந்து சேர்ந்துள்ளன. இராமாயணம், மகாபாரதம் என்ற இரு பெரும் இதிகாசங்கள் கூட கோவில்களில் சொற்பொழிவுகளாகவோ அல்லது கதாகாலட்சேபம் முறையிலோ தான் வந்து அடைந்துள்ளன.

கேட்பதில் பெரிது என்றால் இதுவாகத் தான் இருந்திருக்க வேண்டும். நல்லவை கேட்டல், பெரியோர் சொல் கேட்டல். இன்னும் இவ்விரு இதிகாசங்களும் பெரிது தான் என்றாலும், அவரவர் தத்தம் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப பெரிதெனத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து கேட்கலாம். இன்று அறிவியலின் முன்னேற்றத்தில் audio books, video readings எலக்ட்ரானிக் புத்தகங்கள் என எவளோ நல்ல ஊடகங்கள் இருக்க, நாமும் கொஞ்சம் வாழ்வில் அருள் சேர்க்க முனைவோமே. நூல் பல கற்றலும் இதனுள் அடக்கம்தான்.

பொருள் என்பது வெறும் Byproduct மட்டுமே. 🌷🌷அருள் வாழ்வின் ஆழம் நமக்குத் தேவையான பொருளை கண்டிப்பான முறையில் ஈட்டித்தந்தே தீரும். புதையல் என்பது ஆழத்தில் இருக்க, புறஉலகின் பொருளுக்கு மயங்கிய ஒரு மயக்க வாழ்வு நிறைவுதானா? சிந்திப்போம்.

💐💐💐வாழ்க வளமுடன்💐💐💐

கலாப்ரியன் 🙏🏻

No comments:

Post a Comment