💐💐💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
"உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால், உங்கள் எதிரில் கடவுளே வந்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை... சுவாமி விவேகானந்தர்".
ஒவ்வொரு உயிருக்கும் இரண்டு நிலைகள் எந்த பாகுபாடும் இன்றி இயற்கை அமைத்துத் தந்திருக்கிறது. ஒன்று ஈர்ப்பு நிலை மற்றொன்று எதிர்ப்பு நிலை. இந்த நிலைகள் ஒவ்வொருவருக்கும் தத்தம் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு அனுபவங்களைத் தந்துகொண்டே இருக்கும். ஒன்று உங்களுக்கு மற்றவர்களிடம் ஈர்ப்பை உருவாக்கும், இல்லை மற்றவர்களுக்கு உங்களை ஈர்ப்பானவர்களாக்கும். இதே போலத்தான் எதிர்ப்பு நிலையும். இதில் மற்றோரு சிறப்பான கோணம் தான் நம்மிடம் நமக்கே ஏற்படும் ஈர்ப்பு. இந்த ஈர்ப்பு நம்பிக்கை எனவாகவோ, தன்னம்பிக்கை எனவாகவோ வெளிப்படட்டும் .. ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டியது நம்மிடம் நாம் கொள்ளும் நம்பிக்கை. இதைத்தான் வீரத்துறவி மேற்க்கூறியவாறு பதிவு செய்திருக்கிறார்.
என் அனுபவத்தில் சிலபேர் சொல்லி நான் கவனித்த விசயம்.. "என்னனு தெரியல சார் அவனப் பாத்தாலே எனக்கு கோவம் கோவமா வருது.." இது அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள எதிர்ப்பு விசை அதிகம் ஆதிக்கம் செலுத்துவதால். சில நேரங்களில் சில விசயங்களின் மேல் அல்லது சிலபேரின் மேல் நாம் எதிர்ப்பு நிலையை கடைபிடித்தே தீர வேண்டும் அவை நம்மை ஈர்ப்பவைகளாக இருந்தாலும். குழந்தைகளுக்கு முன் பின் தெரியாதவர்களிடம் சிறிது எதிர்ப்பை கடை பிடிக்க சொல்வதில் உள்ள நன்மையைப் போன்று தான் அதன் உள்நோக்கமாக இருக்க வேண்டும்.
இந்த நிலைகளை நாம் முறைமைப்படுத்த எத்தனையோ பயிற்சிகள் இருந்தாலும் நம்மை நாம் ஈர்க்கும் கலைதான் மிக அதிகமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை என்பது முதலும் முடிவுமான தேவை ஆகும்.
மஹரிஷியின் தத்துவார்த்தமான சிந்தனைகளை கவனித்தால்.. முகவசியம் ஜகவசியம் என்ற தத்துவம் இதற்கான அடிப்படை எனப்புரியும். அடிப்படை சீவகாந்தம். அதுவே பரிகாரம். ஒவ்வொருவரும் தத்தம் சீவகாந்தத்தை செறிவு படுத்த, முறைப்படுத்த, இந்த ஈர்ப்புப் பலப்படும்.
வளமுடன் வாழ எத்துணையோ வழிகள் இருந்தாலும், அந்தப்பாதையில் சென்றால் சேரும் இடம் நன்மை என்பதை நாம் நம்ப வேண்டும். அது கடவுள் நமக்கு காட்டும் பாதை, நம்மை நாம் நம்பாமல், அந்தப் பாதையில் பயணம் மேற்கொள்ள முடியாது.
மற்றோருமுறை யாரேனும் உங்களை வெறுப்புடன் பார்த்தல் நினைவு கொள்ளுங்கள், உங்கள் ஈர்ப்பை நீங்கள் இன்னும் இன்னும் பலப்படுத்த வேண்டும் என்று.
வாழ்க வளமுடன். 🌟🌟🌟கலாப்ரியன்🌟🌟🌟💐💐💐💐