Monday, April 20, 2020

ஈர்ப்பும் எதிர்ப்பும் ...

💐💐💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
"உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால், உங்கள் எதிரில் கடவுளே வந்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை... சுவாமி விவேகானந்தர்".

ஒவ்வொரு உயிருக்கும் இரண்டு நிலைகள் எந்த பாகுபாடும் இன்றி இயற்கை அமைத்துத் தந்திருக்கிறது. ஒன்று ஈர்ப்பு நிலை மற்றொன்று  எதிர்ப்பு நிலை. இந்த நிலைகள் ஒவ்வொருவருக்கும் தத்தம் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு அனுபவங்களைத் தந்துகொண்டே இருக்கும். ஒன்று உங்களுக்கு மற்றவர்களிடம் ஈர்ப்பை உருவாக்கும், இல்லை மற்றவர்களுக்கு உங்களை ஈர்ப்பானவர்களாக்கும். இதே போலத்தான் எதிர்ப்பு நிலையும். இதில் மற்றோரு சிறப்பான கோணம் தான் நம்மிடம் நமக்கே ஏற்படும் ஈர்ப்பு. இந்த ஈர்ப்பு நம்பிக்கை எனவாகவோ, தன்னம்பிக்கை எனவாகவோ வெளிப்படட்டும் ..  ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டியது நம்மிடம் நாம் கொள்ளும் நம்பிக்கை. இதைத்தான் வீரத்துறவி மேற்க்கூறியவாறு பதிவு செய்திருக்கிறார்.

என் அனுபவத்தில் சிலபேர் சொல்லி நான் கவனித்த விசயம்.. "என்னனு தெரியல சார் அவனப் பாத்தாலே எனக்கு கோவம் கோவமா வருது.." இது அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள எதிர்ப்பு விசை அதிகம் ஆதிக்கம் செலுத்துவதால். சில நேரங்களில் சில விசயங்களின் மேல் அல்லது சிலபேரின் மேல் நாம் எதிர்ப்பு நிலையை கடைபிடித்தே தீர வேண்டும் அவை நம்மை ஈர்ப்பவைகளாக இருந்தாலும். குழந்தைகளுக்கு முன் பின் தெரியாதவர்களிடம் சிறிது எதிர்ப்பை கடை பிடிக்க சொல்வதில் உள்ள நன்மையைப் போன்று தான் அதன் உள்நோக்கமாக இருக்க வேண்டும்.

இந்த நிலைகளை நாம் முறைமைப்படுத்த எத்தனையோ பயிற்சிகள் இருந்தாலும்  நம்மை நாம்  ஈர்க்கும் கலைதான் மிக அதிகமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை என்பது முதலும் முடிவுமான தேவை ஆகும்.

மஹரிஷியின் தத்துவார்த்தமான சிந்தனைகளை கவனித்தால்.. முகவசியம் ஜகவசியம் என்ற தத்துவம் இதற்கான அடிப்படை எனப்புரியும். அடிப்படை சீவகாந்தம். அதுவே பரிகாரம். ஒவ்வொருவரும் தத்தம் சீவகாந்தத்தை செறிவு படுத்த, முறைப்படுத்த, இந்த ஈர்ப்புப் பலப்படும்.

வளமுடன் வாழ எத்துணையோ வழிகள் இருந்தாலும்,  அந்தப்பாதையில் சென்றால் சேரும் இடம் நன்மை என்பதை நாம் நம்ப வேண்டும். அது கடவுள் நமக்கு காட்டும் பாதை, நம்மை நாம் நம்பாமல், அந்தப் பாதையில் பயணம் மேற்கொள்ள முடியாது.

மற்றோருமுறை யாரேனும் உங்களை வெறுப்புடன் பார்த்தல் நினைவு கொள்ளுங்கள், உங்கள் ஈர்ப்பை நீங்கள் இன்னும் இன்னும் பலப்படுத்த வேண்டும் என்று.

வாழ்க வளமுடன்.  🌟🌟🌟கலாப்ரியன்🌟🌟🌟💐💐💐💐

வறுமைகால வசந்தங்கள் ..

🙏🙏🙏🙏🙏🙏
பள்ளி செல்லும் காலத்தில்
பத்து பைசா கல்கோனா ..

காசு கொஞ்சம் பத்தலேன்னா
அஞ்சு பைசா ஆரஞ்சு மிட்டாய் 🍬..

பக்கத்து வீட்டு பையன் போல
ஊதாக்கலர் சட்ட 👕..

மூணுவேல சோறு 🍚
முடிஞ்சா
கூட கொஞ்சம் துவையல் ..

உமிக்கரிதான் கருப்பா
தேய்ச்சா பல்லு 🦷
தெரிச்சுடுமே வெளுப்பா ...

குடிசைக்குள்ள தூக்கம் ⛺
குறட்டை 💤கூரையக்கூட தூக்கும் ..

காலம் கொஞ்சம் போக..
காதோரம் நரைக்க
போறபோக்கில் வாழ்க
ரொம்ப 👌🏻நல்லாவே போகுதுங்க ...

எல்லாமே இருந்தும்
என்னத்ததான் நான் சொல்ல...

என் இளம காலவசந்தத்த
கையைபிடிச்சு கூட்டிக்கிட்டு ...
இந்த எழவெடுத்த வறும இப்ப
போயேதான் போச்சுதுங்க
 💔💔💔💔...

கலாப்ரியன்

Monday, April 6, 2020

எது பெரியது

🌺எது பெரியது 🌺

"பெரிது, சிறிது என்பதெல்லாம் தேவைக்கும், காலத்திற்கும் ஏற்ப மாறுதலுக்குரியது. ஒருவன், தேவையான ஒன்றை அது தன்னிடம் இல்லாத நேரம் பெரியதாகக் கருதுகிறான்" - இவ்வாறாக முடிகிறது ஜென் 🧘🏻‍♂️ தத்துவக் கதைகளில் ஒன்று.

சரி, உங்களிடம் பெரிது என்ன என்றல் நீங்கள் எதைச் சொல்வீர்கள்? வெறும் சிந்தனைக்கு 🤔 மட்டுமே இந்தக் கேள்வி.  உங்களின் பதில் ✅ எதுவாக இருந்தாலும் அது அடுத்த கேள்விக்கு ⁉️தொடர்ச்சியானதாக இருக்கும். அதாவது, நீங்கள் பொருள் வாழ்வை முன்நிறுத்துபவராக இருந்தால், உங்களைப் பொறுத்தவரையில் ஒரு  பென்ஸ் கார் 🚘, கடற்கரை பங்களா🏘️, வங்கியில் கணிசமான தொகை💰, சுகபோக வாழ்க்கை என விரிந்து செல்லும் பட்டியல்.

அதுவே நீங்கள், அருள் வாழ்வின் தேடலில் வாழ்பவரெனில், பிரபஞ்சம், பரமாணு, இறையாற்றல், அறிவு என்றவாறு பட்டியல் மாறுபடும்.

இந்த இரண்டிலும், தவறு, சரி என்பதற்கு ஏதும் இல்லை...எல்லாம் அவரவர் பார்வை.. அவ்வளவே. ஆனால், இந்த கேள்வி அடிப்படையில் ஒரு நிர்ணயிக்கும் காரணி மட்டுமே. அது அடுத்த முக்கியமான கேள்விக்கு அடித்தளம் எனக்கூட சொல்லலாம்.

சரி, இப்போது விசயத்துக்கு வரலாம். "கேட்பின் பெரிது கேள்" என்ற முன்னோரின் வாக்கினை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள்? இது உங்கள் பொருள் வாழ்க்கை அல்லது அருள் வாழ்க்கை முறையை எவ்வாறு மாற்றுகிறது என்பதே கேள்வி. பெரிது என்ன என்பதை நீங்கள் நினைப்பதற்கும், பெரியோர்கள் நிர்ணயம் செய்ததற்கும் உள்ள இடைவெளியை அளவிடவே இந்த முயற்சி.

ஆயிரமாயிரம் ஆண்டு காலங்களுக்கு முன்னாள் நமக்குச் சொல்லிச் சென்ற ஒரு விஷயம் வெறும் பொருள் சார்ந்த விசயமாகவா இருக்கும்?

அந்தக்காலங்களில் சத்சங்கங்ககள், ஆன்மிகச்சொற்பொழிவுகள், வீதிப்பாராயணங்கள், என்று மக்களுக்குச் செவிவழியாகவே பெரும்பான்மையான நல்ல விசயங்கள்  வந்து சேர்ந்துள்ளன. இராமாயணம், மகாபாரதம் என்ற இரு பெரும் இதிகாசங்கள் கூட கோவில்களில் சொற்பொழிவுகளாகவோ அல்லது கதாகாலட்சேபம் முறையிலோ தான் வந்து அடைந்துள்ளன.

கேட்பதில் பெரிது என்றால் இதுவாகத் தான் இருந்திருக்க வேண்டும். நல்லவை கேட்டல், பெரியோர் சொல் கேட்டல். இன்னும் இவ்விரு இதிகாசங்களும் பெரிது தான் என்றாலும், அவரவர் தத்தம் வாழ்க்கைச் சூழலுக்கேற்ப பெரிதெனத் தேவையானவற்றைத் தேர்ந்தெடுத்து கேட்கலாம். இன்று அறிவியலின் முன்னேற்றத்தில் audio books, video readings எலக்ட்ரானிக் புத்தகங்கள் என எவளோ நல்ல ஊடகங்கள் இருக்க, நாமும் கொஞ்சம் வாழ்வில் அருள் சேர்க்க முனைவோமே. நூல் பல கற்றலும் இதனுள் அடக்கம்தான்.

பொருள் என்பது வெறும் Byproduct மட்டுமே. 🌷🌷அருள் வாழ்வின் ஆழம் நமக்குத் தேவையான பொருளை கண்டிப்பான முறையில் ஈட்டித்தந்தே தீரும். புதையல் என்பது ஆழத்தில் இருக்க, புறஉலகின் பொருளுக்கு மயங்கிய ஒரு மயக்க வாழ்வு நிறைவுதானா? சிந்திப்போம்.

💐💐💐வாழ்க வளமுடன்💐💐💐

கலாப்ரியன் 🙏🏻

Saturday, April 4, 2020

என் வாழ்வில் ஓர் இரகசியம்

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

என் சகோதரி ஒருநாள் வீட்டைச்🏘️ சுத்தப்படுத்தும் வேலையில் இருந்தபோது, எதேச்சையாக ஒரு வரைபடம் 🎨அவள் கண்ணில் பட, எனக்கு அதை WhatsApp வழியாக அனுப்பிவிட்டு கேட்டாள் - "இந்தப்படம் நினைவிருக்கிறதா"? என்று.

அந்த வரைபடம் தான் நீங்கள் மேலே பார்க்கும் ஒரு Royal Enfield 🏍️ பைக்கின் வரைபடம். இந்த மெசஜ்க்கும் அந்த படத்துக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? - சொல்கிறேன்.

"Rohnda Byrne" என்று ஒரு ஆஸ்திரேலிய எழுத்தாசிரியை. அவர் எழுதிய நூல்களுள் ஒன்று "The Secret", நூல் வடிவாகவும், Documentary படமாகவும் கூட வெளிவந்துள்ளது. அதில் ஒரு சிறு காட்சிக்குறிப்பு வரும். ஒரு மனிதன் தன வாழ்நாளில் ஒரு வீட்டை🏠 வாங்க வேண்டும் என இயற்கையோடு இணைந்து சங்கல்பமாக நினைத்துக்கொள்கிறார். அந்த நினைப்பு உள்ளுக்குள்ளே ஒரு கனல் போல இருக்க காலம் ஓடுகிறது ⏳.

சிறிது காலத்துக்குப் பின் அவர் ஒரு புது வீடு வாங்கி குடிபுகுகின்றார். அவரது மகன் 👼🏻, பத்து வயதுக்குள் இருக்கும், ஒரு சுவரில் மாட்டும் போட்டோ படத்தைக் காண்பித்து இது என்ன என கேட்கின்றான். அதை பார்ப்பவர் தன் கண்களையே அவரால் நம்ப முடியவில்லை, ஏனென்றால், இவர் இப்போது குடிவந்த வீடு தான், இவர் ஒரு காலத்தில் ஆசைப்பட்ட வீடு, அந்தப் படத்தில் இருப்பது. அவரது ஆனந்தக்கண்ணீருடன் அந்தக் காட்சி முடியவடையும். 🌷🌷

நீங்கள் மேலே பார்க்கும் Royal Enfield வரைபடம் நான் வரைந்து ஒரு 15 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும்.அந்தக் காலகட்டத்தில் நான் மிதி வண்டியில் 🚲 போனால் கூட அதை நான் என் கனவு பைக் போலத்தான் நினைத்து ஓட்டுவது வழக்கம். வேகமாக செல்கையில் பறக்கும் முடியைக் கோதி விடுவது போல் பாவனை செய்வது, வாயாலே புல்லட் போல் ஒலி எழுப்புவது என எண்ணத்துள்ளேயே என் வாழ்க்கையேச் சிறப்பாக வாழ்ந்த காலம் அது.

ஆச்சரியமான விசயம் என்னவென்றால், நிறம், மாடல், வடிவம், பம்பர், ஹான்ட் பார் என எந்த ஒரு விதத்திலும் மாற்றம் இல்லாமல் ஒரு பைக் ஒரு ருபாய் கூட கடன், லோன் இல்லாமல் முழுப்பணம் கொடுத்து வாங்கினேன் பிற்காலத்தில்.  இந்த வரைபடத்தை மீண்டும் பார்க்கும் போதுதான் என் சங்கல்பத்தின் ஆழம் எனக்கேப் புரிந்தது.

ஆம் நண்பர்களே, பிரபஞ்சம்❤️❤️ நாம் நினைப்பது போல ஒன்றை அல்ல, நினைப்பதையே தரும் வல்லமையுடன் எந்த க்ஷணமும் காத்துக்கொண்டே இருக்கிறது.

அதனிடம் எப்படி கேட்பது என கேட்பீர்களானால், அது சொல்லக்கூடும், "YOUR WISH IS MY COMMAND", "உங்கள் விருப்பமே எனக்கான கட்டளை" என்று.💓

வேண்டியத்தைப் பெற காத்திருக்கத் தேவை இல்லை நண்பர்களே, ஒரு கட்டளையையே போதும் சங்கல்பமாக, காலம் கொண்டு வந்து சேர்த்துவிடும் உங்கள் காலடியில்.

🌺🌺வாழ்க வளமுடன்🌺🌺

உங்கள் அன்புடன் - கலாப்ரியன்💐💐💐

Wednesday, April 1, 2020

மகளதிகாரம் 6

இவள்
உண்ணும்போது
சிதறிப்போகும்
எச்சிலமிழ்தை
உண்ண வரும்
எறும்புகள்,
தினமும்
தோற்று ஓடும்
என்னிடத்தில் ...!

கலாப்ரியன் 

மகளதிகாரம் 5

காணும்படி
ஒளிதலும் ..
கண்டபின்பும்
தேடலும் ..
தந்தை மகள்
விளையாட்டில்
உச்சகட்ட இன்பம்

கலாப்ரியன் 

மகளதிகாரம் 4

தெரிந்து கொண்டே
ஒளிவதும் ..
தெரிந்தும்,
தேடிக்கொண்டே
இரசிப்பதும் ...
தந்தை மகள்
விளையாட்டில்
உச்சகட்ட இன்பம்

கலாப்ரியன் 

Tuesday, March 31, 2020

இறைவி

இரைச்சலான
என் வாழ்வில்
இசை எனும் கலையாய்
இயல்புடன் நுழைந்தவள் ...

தன் போல்
ஓருயிர்
எனக்காய் ஈன்றவள் ...

தவமெனும்
என்
வாழ்வின்
தலையாய்த்
திகழ்பவள் ...

இறையாய்
நின்று
இமையாய்
எனைக் காக்கும்
இவளோர்
இறைவி...

~கலாப்ரியன் 

மகளதிகாரம் 3

பிறந்தபோது 
தாயாகத் தெரியும் மகள்கள்
தாயானலும் கூட
குழந்தைகளாகவே
இருந்துவிடுகின்றனர்

கலாப்ரியன்

நல்வாழ்க்கை ..!

இப்போது தான்
ஓரிரு வாரங்கள்
என் நுரையீரல்
சுத்தமான காற்றை
சுவாசிப்பதாய் உணர்கிறது

மொட்டை மாடிகளில்
காற்றுடன் சேர்த்து
சில
மனிதர்களின் நடமாட்டம்

மக்கள் ஓட்டத்தை
உணவுக்காகவும்
அத்தியாவசத்திற்கும் என
காண முடிந்தது

ஆரோக்கியத்துக்காக
அதிக அக்கறை ..
அளவான உணவு ..
முடித்த அளவு
உடற்பயிற்சி ..
குடும்பத்துடன் சேர்ந்துணவு ..
குழந்தைகளுடன்
விளையாட்டு ..
இல்லாதவர்க்கு
அரசாங்க ஆதரவு ..
எல்லோர்க்கும் மருத்துவம் ..
என
எத்துணை மாற்றங்கள்...

நல்லதை எல்லாம்
ஏற்றுக் கொள்ள ..
நாளும் அதை
நிரந்தரமாக்க ..
எல்லோர்க்கும் சமவாய்ப்பு..

காரணம் கேட்டேன்
ஏதோ
கண்ணுக்குத்தெரியாத
நுண்ணியிராம்..

காரணம்
எதுவாயிருந்தானலென்ன ..
கடவுளும் தான்
கண்ணுக்குத்
தெரிவதில்லை தானே ..

மீண்டு(ம்) வாழ்வோம்
நல்லதொரு வாழ்க்கை

கலாப்ரியன் 

Friday, February 14, 2020

மனையதிகாரம் 2

இவள் எதற்க்காகப்
பிறந்தாள் என்பது
இறையின் அமைப்பு
ஆனால்
எனக்காகப் பிறந்தாள்
என்பதே
மிகவும் சிறப்பு

கலாப்ரியன் 

மனையதிகாரம் 1

கவிதைக்குப்
பொய் அழகு
என்றார்கள்..!
ஆனால் 
உன்னைப் பற்றி
எழுதும்போது மட்டும்
எனக்கு அது
தேவைப்பட்டதே
இல்லை..!

கலாப்ரியன் 

மகளதிகாரம் 2

உன் புகைப்படம்
பார்க்கும் போதெல்லாம்
நினைக்கிறேன்..
இதைவிட அழகாக
இன்னொரு
கவிதை எழுதமுடியுமா என !!!

கலாப்ரியன் 

மகளதிகாரம் 1

இவளை என்
கைகளில் ஏந்திய
முதல் நொடி புரிந்தது
இந்த உலகமே - இனி
என் கைவசம் என ..!

கலாப்ரியன் 

ஆவியானவர்...

Image result for jesus

என்னிடம் அன்பை
எடுத்துக்கொண்டு
பாவங்களைக் கொட்டிவிடு
என்று
இரண்டு கைகளையும் விரித்து
வந்தவரை
ஆணியில் அறைந்து
ஆவியாக்கினோரே..!

அவர் மீண்டும்
ஆவியாகவே வந்தார்

நாம்
இன்னும் பாவியாகவே.. !!

தீபாவளிச் சட்டை

Image result for poor boy enjoying diwali

ஒரே ஒரு சட்டை
தீபாவளிக்கு.!
அதுவும்
ஐம்பது ருபாய் மட்டும் !!

கிழிந்த பின்னும்
அதைப் புதிதாக்க
அம்மாவால் முடிந்தது !!

சின்ன சின்ன பூக்கள்
போட்ட சட்டையில்
பூக்களை விட
கிழிசல்கள் அதிகமாவதற்குள்
அடுத்த தீபாவளியும்
வந்துவிடும்

வரப்போகும் நாளுக்காக
வருடம் முழுவதும்
காத்திருந்த அனுபவம்
இப்போது நினைக்கும்போது
இன்னொரு முறை
இனிக்கிறது

இல்லாமை இருந்தும்
என் அப்பாவால்
தரமுடிந்த மகிழ்ச்சி ..
என்னிடம்
எல்லாம் இருந்தும்
இயலாமை மட்டுமே
பெரும்பாலும்!!

வாழ்வே அருளாக
ஆகும் போது
வாழ்வதற்குப் பொருள்
தேவைப்படுவது இல்லை ..
வாழ்வோம் அருளுடன்
வாழ்க வளமுடன்

~கலாப்ரியன் 

ஈர்ப்புவிசை

💐💐💐💐💐💐💐💐🙏🏻🙏🏻🙏🏻
"உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்றால், உங்கள் எதிரில் கடவுளே வந்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை... சுவாமி விவேகானந்தர்".

ஒவ்வொரு உயிருக்கும் இரண்டு நிலைகள் எந்த பாகுபாடும் இன்றி இயற்கை அமைத்துத் தந்திருக்கிறது. ஒன்று ஈர்ப்பு நிலை மற்றொன்று  எதிர்ப்பு நிலை. இந்த நிலைகள் ஒவ்வொருவருக்கும் தத்தம் தன்மைக்கு ஏற்ப வெவ்வேறு அனுபவங்களைத் தந்துகொண்டே இருக்கும். ஒன்று உங்களுக்கு மற்றவர்களிடம் ஈர்ப்பை உருவாக்கும், இல்லை மற்றவர்களுக்கு உங்களை ஈர்ப்பானவர்களாக்கும். இதே போலத்தான் எதிர்ப்பு நிலையும். இதில் மற்றோரு சிறப்பான கோணம் தான் நம்மிடம் நமக்கே ஏற்படும் ஈர்ப்பு. இந்த ஈர்ப்பு நம்பிக்கை எனவாகவோ, தன்னம்பிக்கை எனவாகவோ வெளிப்படட்டும் ..  ஆனால் முக்கியமாக கவனிக்க வேண்டியது நம்மிடம் நாம் கொள்ளும் நம்பிக்கை. இதைத்தான் வீரத்துறவி மேற்க்கூறியவாறு பதிவு செய்திருக்கிறார்.

என் அனுபவத்தில் சிலபேர் சொல்லி நான் கவனித்த விசயம்.. "என்னனு தெரியல சார் அவனப் பாத்தாலே எனக்கு கோவம் கோவமா வருது.." இது அவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள எதிர்ப்பு விசை அதிகம் ஆதிக்கம் செலுத்துவதால். சில நேரங்களில் சில விசயங்களின் மேல் அல்லது சிலபேரின் மேல் நாம் எதிர்ப்பு நிலையை கடைபிடித்தே தீர வேண்டும் அவை நம்மை ஈர்ப்பவைகளாக இருந்தாலும். குழந்தைகளுக்கு முன் பின் தெரியாதவர்களிடம் சிறிது எதிர்ப்பை கடை பிடிக்க சொல்வதில் உள்ள நன்மையைப் போன்று தான் அதன் உள்நோக்கமாக இருக்க வேண்டும்.

இருள் என்பதை வெளிச்சத்தின் குறைபாடாகக் கூட பார்க்கலாம்தானே? உங்களின் ஈர்ப்பில் ஏற்படும் குறைபாடு, எதிர்ப்பு அலைகள் அதிகமாவதைப்போல காட்டக்கூடும்.

இந்த நிலைகளை நாம் முறைமைப்படுத்த எத்தனையோ பயிற்சிகள் இருந்தாலும்  நம்மை நாம்  ஈர்க்கும் கலைதான் மிக அதிகமாக கவனத்தில் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை என்பது முதலும் முடிவுமான தேவை ஆகும்.

மஹரிஷியின் தத்துவார்த்தமான சிந்தனைகளை கவனித்தால்.. முகவசியம் ஜகவசியம் என்ற தத்துவம் இதற்கான அடிப்படை எனப்புரியும். அடிப்படை சீவகாந்தம். அதுவே பரிகாரம். ஒவ்வொருவரும் தத்தம் சீவகாந்தத்தை செறிவு படுத்த, முறைப்படுத்த, இந்த ஈர்ப்புப் பலப்படும்.

வளமுடன் வாழ எத்துணையோ வழிகள் இருந்தாலும்,  அந்தப்பாதையில் சென்றால் சேரும் இடம் நன்மை என்பதை நாம் நம்ப வேண்டும். அது கடவுள் நமக்கு காட்டும் பாதை, நம்மை நாம் நம்பாமல், அந்தப் பாதையில் பயணம் மேற்கொள்ள முடியாது.

மற்றோருமுறை யாரேனும் உங்களை வெறுப்புடன் பார்த்தல் நினைவு கொள்ளுங்கள், உங்கள் ஈர்ப்பை நீங்கள் இன்னும் இன்னும் பலப்படுத்த வேண்டும் என்று.

🌟🌟🌟🌟💐💐💐💐வாழ்க வளமுடன்.  🌟🌟🌟🌟💐💐💐💐