குரு அருள் ...!
எல்லையற்ற பிரபஞ்சத்தில்
இரவென்ன
பகலென்ன
எண்ணமற்ற மனதிற்கு
இன்பமென்ன
துன்பமென்ன..
அல்லலுற்று வாழ்கின்றேன்
நான் செய்யா
தவம் என்ன...
இறை நடத்தும் நாடகத்தில்
நீயென்ன
நானென்ன...
மீண்டு வரும்
வழி தெரிய - குருவின்
அருளன்றி வேறென்ன...
~கலாப்ரியன்
No comments:
Post a Comment