Thursday, October 10, 2019

அறியப்படாத வசந்தங்கள்...



ஆற்று நீர் குளியல்
ஆத்தங்கரை விளையாட்டு

மண்பானை சமையல்
மறுநாள்
நீர்மோறும் பழையசோறும்

பசித்த பின் தான் உணவு
அதுவும்
இரு வேளை மட்டும் தான்

ஆரோக்கியத்தைப்  பாதுகாக்க
தேவையற்ற
தனி முயற்சி
எங்கு சென்றாலும்
நடைதான் ..
பெரும்பாலும்
கால்களே வாகனம்

நண்பர்களுடன்
அரட்டைக் கச்சேரி
தெருவோர மிட்டாய் கடை
காசிருந்தால் சர்பத்
இல்லையென்றால்
அடிபம்பு தண்ணீர்

மாலை முழுதும் விளையாட்டு
மங்கிப்போன வெளிச்சத்தில்
அக்காவுடன் வீட்டுப்பாடம்

எல்லாருக்கும்
ஓர் விரிப்பு
அம்மாவுக்குத்  தலையணை இல்லை
எனக்கு மட்டும் அவளின் இடது கை
ஆழ்நிலையில் உறக்கம்

எதிர்பார்ப்புகளற்ற அடுத்தநாள்
மறுபடி ஓர் விடியல்


இப்போது தான்
புரிகிறது ..

இளமையில் இருந்தது
வறுமை அல்ல
அது
அறியப்படாத
ஒரு வசந்தம்..


~கலாப்ரியன்

No comments:

Post a Comment