ஒரு மரணத்தால்
என்ன செய்துவிட முடியும்?
சிலரை அழ வைக்கும்,
சிலருக்கு அதிர்ச்சி தரும்,
பல பகைகளை மறக்கடிக்கும்,
பலருக்கு பயம் தரும்.
துரோகங்களை மன்னித்து விடும்,
வெட்டியானுக்கு இருவேளைகள்
உணவளிக்கும் ..
சில நாட்கள்தான்..
எண்ணங்கங்களில் இருந்து கூட,
இறந்தவரை நீக்கிவிடும்.
ஆனால் மரணம்,
மரணித்தவனுக்கு மட்டும்..
மிகப்பெரும் விடுதலையை
தந்து விடும்.!!
~கலாப்ரியன்