Saturday, May 10, 2025

குழந்தைகள்

 குழந்தைகள் 

இல்லாத போது 
எல்லா பொம்மைகளும் 
ஏன்தான் இத்தனை 
சத்தம் போடுகின்றதோ 
இந்த வீட்டில் 

கலாப்ரியன் 

Sunday, May 4, 2025

சுவடுகள்

 

சுவடுகள் இல்லாமல் 
நடக்க முயல்கிறேன்...

என்னை யாரும் 
தொடரும் வாய்ப்பைத் 
தர வேண்டாமென ..

என் 
பாதைகளும் 
தடம் மாறியது 
உண்டு! 

கலாப்ரியன்