Monday, September 30, 2024

பாதை


நான் 
தனியாக நடக்கிறேன் 
ஏனெனில் 
என் பாதை 
சரியானதாய் இருக்கலாம் ...

கலாப்ரியன்

 

Tuesday, September 17, 2024

நிதானம்

 நின்று 

நிதானித்து 
நிமிர்ந்து பார்க்கிறேன் 
வாழ்க்கையை !

சற்றே வேகமாய்த்தான் 
ஓடி விட்டேன் போல ..

தேவை என்று 
ஓடிய எல்லாம் 
இப்போது தேவையற்ற 
இடத்தில் ..

என் ஓட்டத்தில் 
இல்லாதது என்னவென்று 
இப்போதுதான் புரிந்தது..

அது 
நிதானம் 
மட்டும்தான் .!

கலாப்ரியன் 

Friday, August 16, 2024

வித்தியாசம்


ஏதேதோ நினைவுகளுடன் 

உறங்கிப்போகின்றேன்.. 

நினைவுகள் 

கனவுகளாய்த் தொடர்ந்து 

விடுகின்றது ..

விழித்தவுடன்  

கனவுகள் மறைந்து

நினைவுகள் மீண்டும் 

தொடர்கின்றது..

என் உறக்கத்திற்கும் 

விழிப்பிற்கும் 

என்னதான் வித்தியாசம் ..?


கலாப்ரியன்

Sunday, July 28, 2024

புன்னகை

 



காரின் ஜன்னலோரம் 
வந்து நிற்கும் 
சிறுமியின் முகத்தைப் 
பார்க்காமலே 
காசு தருகிறேன் ..!
அவளிடம் பூக்கும்  
சிறிய புன்னகையை 
விடவா 
என் காசு பெரியது?

கலாப்ரியன் 

உள்ளத்தின் உளறல்கள்

 



மவுனம் என்பது 

உள்ளத்தில் 
நிகழும் உளறல்களின் 
உச்சக்கட்டம் 

கலாப்ரியன்

மவுனம் பேசுகின்றது 

 



சில மவுனங்கள் 

காதலால்.. 
சில மவுனங்கள் 
கோபத்தால்.. 
சில மவுனங்கள் 
வெறுப்பால்.. 
சில மவுனங்கள் 
அறியாமையால்.. 
சில மவுனங்கள் 
எல்லாம் அறிந்ததால்.. 
மௌனியாக மாறுங்கள் !
உங்கள் மவுனமே 
உங்களுக்காகப் பேசும்..
மிகத் தெளிவாக  !!

கலாப்ரியன் 

மவுனத்தின் பசி

 



மவுனத்திற்குத்தான்

எத்துணை பசி 
எல்லா வார்த்தைகளையும் 
உண்டபின்னும் 
அமைதியாகவே
காத்துக் கிடக்கின்றது 
அடுத்த வார்த்தைக்காக .. 

கலாப்ரியன் 

மழை ரசிகன்


வேகமெடுத்து 
வெள்ளமாகும் வரை 
நானும் 
மழையை 
ரசித்துக்கொண்டு தான் 
இருக்கிறேன் ..
ஒவ்வொரு 
மழைக்காலத்திலும் !

கலாப்ரியன்  

Tuesday, April 16, 2024

இழப்பு

 


ஓஓ 

என்ற கதறலுடன் 
ஒரு கைபேசி 
அழைப்பு 
அதிகாலை வேளையில்..!

மாமா எனும் 
ஒரு உறவு ஒன்று 
மறைந்துவிட்டது 
இதுதான் 
செய்தி...

இதுதான் நடக்கும் 
என முன்பே 
தெரிந்திருக்கும் போல...! 
மனம் 
சிறிது சலனப்பட்டு 
மீண்டும் மீண்டுவிட்டது ..!!

முன்பு ஒருநாள் 
நண்பனின் இழப்பு 
அதன் பின் 
ஒரு உறவின் 
இழப்பு ..

ஒவ்வொரு முறையும் 
மனம் 
சலனத்திற்கும் மீட்சிக்கும் 
நடுவில்...

நமக்காகவும் 
ஒரு அழைப்பு 
என்றோ ஒருநாள் 
யாரோ ஒருவர்
செய்யத்தான் போகின்றார் ..

இருப்பினும் 
வாழ்க்கை மட்டும் 
ஏனோ 
இன்னமும் ஒரு 
சின்ன வட்டத்துக்குள்ளேயே ..!

கலாப்ரியன் 

Monday, April 15, 2024

தந்தி



அதிகாலையில் வரும் 

கைபேசி 
அழைப்புகள் எல்லாம் 
தந்திகள் போல 
ஏனோ 
ஒரு பயத்தைத் 
தந்து விடுகின்றது!

கலாப்ரியன்

Sunday, April 14, 2024

கடைசி தோசை



அம்மா 

கடைசி தோசை 

சுட்டு முடித்த 
பின்பு 
சட்டியில் இன்னமும் 
ஒட்டியிருந்தது 
என் பசியும் 
எங்கள் வீட்டு 
ஏழ்மையும் 

கலாப்ரியன்