Sunday, July 28, 2024

புன்னகை

 



காரின் ஜன்னலோரம் 
வந்து நிற்கும் 
சிறுமியின் முகத்தைப் 
பார்க்காமலே 
காசு தருகிறேன் ..!
அவளிடம் பூக்கும்  
சிறிய புன்னகையை 
விடவா 
என் காசு பெரியது?

கலாப்ரியன் 

உள்ளத்தின் உளறல்கள்

 



மவுனம் என்பது 

உள்ளத்தில் 
நிகழும் உளறல்களின் 
உச்சக்கட்டம் 

கலாப்ரியன்

மவுனம் பேசுகின்றது 

 



சில மவுனங்கள் 

காதலால்.. 
சில மவுனங்கள் 
கோபத்தால்.. 
சில மவுனங்கள் 
வெறுப்பால்.. 
சில மவுனங்கள் 
அறியாமையால்.. 
சில மவுனங்கள் 
எல்லாம் அறிந்ததால்.. 
மௌனியாக மாறுங்கள் !
உங்கள் மவுனமே 
உங்களுக்காகப் பேசும்..
மிகத் தெளிவாக  !!

கலாப்ரியன் 

மவுனத்தின் பசி

 



மவுனத்திற்குத்தான்

எத்துணை பசி 
எல்லா வார்த்தைகளையும் 
உண்டபின்னும் 
அமைதியாகவே
காத்துக் கிடக்கின்றது 
அடுத்த வார்த்தைக்காக .. 

கலாப்ரியன் 

மழை ரசிகன்


வேகமெடுத்து 
வெள்ளமாகும் வரை 
நானும் 
மழையை 
ரசித்துக்கொண்டு தான் 
இருக்கிறேன் ..
ஒவ்வொரு 
மழைக்காலத்திலும் !

கலாப்ரியன்