Tuesday, March 31, 2020

இறைவி
























இரைச்சலான
என் வாழ்வில்
இசை எனும் கலையாய்
இயல்புடன் நுழைந்தவள் ...

தன் போல்
ஓருயிர்
எனக்காய் ஈன்றவள் ...

தவமெனும்
என்
வாழ்வின்
தலையாய்த்
திகழ்பவள் ...

இறையாய்
நின்று
இமையாய்
எனைக் காக்கும்
இவளோர்
இறைவி...

~கலாப்ரியன் 

மகளதிகாரம் 3



பிறந்தபோது 
தாயாகத் தெரியும் மகள்கள்
தாயானலும் கூட
குழந்தைகளாகவே
இருந்துவிடுகின்றனர்

கலாப்ரியன்

நல்வாழ்க்கை ..!



இப்போது தான்
ஓரிரு வாரங்கள்
என் நுரையீரல்
சுத்தமான காற்றை
சுவாசிப்பதாய் உணர்கிறது

மொட்டை மாடிகளில்
காற்றுடன் சேர்த்து
சில
மனிதர்களின் நடமாட்டம்

மக்கள் ஓட்டத்தை
உணவுக்காகவும்
அத்தியாவசத்திற்கும் என
காண முடிந்தது

ஆரோக்கியத்துக்காக
அதிக அக்கறை ..
அளவான உணவு ..
முடித்த அளவு
உடற்பயிற்சி ..
குடும்பத்துடன் சேர்ந்துணவு ..
குழந்தைகளுடன்
விளையாட்டு ..
இல்லாதவர்க்கு
அரசாங்க ஆதரவு ..
எல்லோர்க்கும் மருத்துவம் ..
என
எத்துணை மாற்றங்கள்...

நல்லதை எல்லாம்
ஏற்றுக் கொள்ள ..
நாளும் அதை
நிரந்தரமாக்க ..
எல்லோர்க்கும் சமவாய்ப்பு..

காரணம் கேட்டேன்
ஏதோ
கண்ணுக்குத்தெரியாத
நுண்ணியிராம்..

காரணம்
எதுவாயிருந்தானலென்ன ..
கடவுளும் தான்
கண்ணுக்குத்
தெரிவதில்லை தானே ..

மீண்டு(ம்) வாழ்வோம்
நல்லதொரு வாழ்க்கை

கலாப்ரியன்