Sunday, December 15, 2019

தாய்மரம்


வயிற்றில் உதைக்கும்
குழந்தையை
வலிந்து அணைக்கும்
தாயைப்போலத்தான்
மரங்கள்...

தன்னை
உதைப்பவன்
தலையில் கூட
பூமழைப் பொழிகின்றது....

கலாப்ரியன் 

இறையுடன் இணைவதெப்போ



கடலாய் ஆவியாய்
மழையாய்த் துளியாய்
நதியாய் நான்
ஓடி ஓடி
மீண்டும் மீண்டும்
உருவும் கருவும்
மாறி மாறி
மீண்டும் கடலாய் ..!

எல்லாம்
கடந்து
என்னைத்
தொலைத்து
உன்னுள் சேர்வது
எக்காலம்??

கலாப்ரியன்

மௌனமொழி



விடை ஏதும் கிடைக்காமல்
என்னுள் அடங்கிய
கேள்விகள்
பல உண்டு

என்னிடம் கேட்கப்படாமல்
அடங்கிய
பதில்களும்
பல உண்டு

அதிகம் கிடைத்தப் பின்
அடங்கும் சில
ஆசைகளைப் போல

மனதின்
இறைச்சல் அடங்கியதும்
எல்லாம் விளங்கியது ..!

கேள்வியாய்ப்
பதிலாய்
அறிவே அனைத்துமாய்
மௌனமே அதன் மொழியாய் ..!!

கலாப்ரியன்