நிலாமகன்
Monday, September 30, 2024
பாதை
நான்
தனியாக நடக்கிறேன்
ஏனெனில்
என் பாதை
சரியானதாய் இருக்கலாம் ...
கலாப்ரியன்
Tuesday, September 17, 2024
நிதானம்
நின்று
நிதானித்து
நிமிர்ந்து பார்க்கிறேன்
வாழ்க்கையை !
சற்றே வேகமாய்த்தான்
ஓடி விட்டேன் போல ..
தேவை என்று
ஓடிய எல்லாம்
இப்போது தேவையற்ற
இடத்தில் ..
என் ஓட்டத்தில்
இல்லாதது என்னவென்று
இப்போதுதான் புரிந்தது..
அது
நிதானம்
மட்டும்தான் .!
கலாப்ரியன்
Friday, August 16, 2024
வித்தியாசம்
ஏதேதோ நினைவுகளுடன்
உறங்கிப்போகின்றேன்..
நினைவுகள்
கனவுகளாய்த் தொடர்ந்து
விடுகின்றது ..
விழித்தவுடன்
கனவுகள் மறைந்து
நினைவுகள் மீண்டும்
தொடர்கின்றது..
என் உறக்கத்திற்கும்
விழிப்பிற்கும்
என்னதான் வித்தியாசம் ..?
கலாப்ரியன்
Sunday, July 28, 2024
புன்னகை
காரின் ஜன்னலோரம்
வந்து நிற்கும்
சிறுமியின் முகத்தைப்
பார்க்காமலே
காசு தருகிறேன் ..!
அவளிடம் பூக்கும்
சிறிய புன்னகையை
விடவா
என் காசு பெரியது?
கலாப்ரியன்
உள்ளத்தின் உளறல்கள்
மவுனம் என்பது
உள்ளத்தில்
நிகழும் உளறல்களின்
உச்சக்கட்டம்
கலாப்ரியன்
மவுனம் பேசுகின்றது
சில மவுனங்கள்
காதலால்..
சில மவுனங்கள்
கோபத்தால்..
சில மவுனங்கள்
வெறுப்பால்..
சில மவுனங்கள்
அறியாமையால்..
சில மவுனங்கள்
எல்லாம் அறிந்ததால்..
மௌனியாக மாறுங்கள் !
உங்கள் மவுனமே
உங்களுக்காகப் பேசும்..
மிகத் தெளிவாக !!
கலாப்ரியன்
மவுனத்தின் பசி
மவுனத்திற்குத்தான்
எத்துணை பசி
எல்லா வார்த்தைகளையும்
உண்டபின்னும்
அமைதியாகவே
காத்துக் கிடக்கின்றது
அடுத்த வார்த்தைக்காக ..
கலாப்ரியன்
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)